Advertisement

சிதம்பரத்துக்கு ஜாமின்; OOBC லிஸ்ட்டில் சேர்ப்பு!

ஐ.என்.எக்ஸ். மீடியா ஊழல் வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரத்தை ஆகஸ்ட் 21ல் சி.பி.ஐ. கைது செய்தது. இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட் அக்டோபர் 21ம்தேதி ஜாமின் வழங்கியது. இதே வழக்கில் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையினர் சிதம்பரத்தை அக்டோபர் 16ம்தேதி கைது செய்தனர். இந்த வழக்கில் ஜாமின் மனுவை டில்லி ஐகோர்ட் தள்ளுபடி செய்ததால் சுப்ரீம் கோர்ட்டை சிதம்பரம் நாடினார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமின் வழங்கினர். மனுதாரர் தப்பிச் செல்லவில்லை; ஆதாரங்களை அழிக்கவில்லை; விசாரணைக்கு ஒத்துழைத்துள்ளார் என நீதிபதிகள் உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement