Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 02-12-2019 | Sports Roundup | Dinamalar

ஒரு ரன்னில் வீழ்ந்தது தமிழகம் குஜராத்தின் சூரத்தில் சையது முஷ்தாக் அலி டிராபி 'டுவென்டி-20' தொடரின் பைனல் நடந்தது. முதலில் விளையாடிய கர்நாடக அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 180 ரன்கள் எடுத்தது. அடுத்து களமிறங்கிய தமிழக அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 179 ரன்கள் எடுத்து, ஒரு ரன்னில் தோற்று, கோப்பையை கோட்டைவிட்டது. ------------------------- சென்னை சிட்டி வெற்றி கோயம்பத்துாரில் நடந்த ஐ-லீக் கால்பந்து லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் சென்னை சிட்டி அணி, தனது முதல் போட்டியில் அறிமுக அணியான மணிப்பூரை சந்தித்தது. போட்டியின் 50 வது நிமிடத்தில் மிராண்டா அடித்த கோல் கைகொடுக்க, சென்னை சிட்டி அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ------------------------- பிரியம் கார்க் கேப்டன் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் நடத்தும் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கிரிக்கெட் தொடர் தென் ஆப்ரிக்காவில் வரும் 2020ம் ஆண்டு, ஜனவரி 17 முதல் பிப்ரவரி 9 வரை நடக்கவுள்ளது. இதில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. உத்தர பிரதேச பேட்ஸ்மேன் , 19 வயது பிரியம் கார்க், கேப்டனாக நியமிக்கப்பட்டார். ------------------------- கோப்பை வென்றது ஆஸ்திரேலியா ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் மோதிய இரண்டாவது டெஸ்ட், பகலிரவு போட்டியாக அடிலெய்டில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலியா 3 விக்கெட்டுக்கு 589 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 302 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. 'பாலோ ஆன்' பெற்று இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த பாகிஸ்தான் 239 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. இன்னிங்ஸ், 48 ரன்னில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரை 2-0 என கைப்பற்றியது. ------------------------
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement