Advertisement

மாநில கபடி; குறிச்சி கிளப் வெற்றி

கோவை, வேலந்தாவளம் வி.எல்.சி., கபடி குழு மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து, மாநில கபடி போட்டி, முனியப்பன் கோவில் மைதானத்தில் நடத்தினர். ஈரோடு, திருப்பூர், சேலம், தேனி, கோவை, பாலக்காடு மாவட்டங்களில் இருந்து 46 அணிகள் பங்கேற்றன. 'நாக்- அவுட்' முறையில் போட்டிகள் நடந்தன. ஞாயிறன்று நடந்த முதல் சுற்று போட்டியில், என்.எப்., வாரியர்ஸ் அணி, டி.எஸ்.சி., பிரதர்ஸ் அணியையும்; பையர் பாய்ஸ் அணி, என்.எல்.எஸ்., பிரண்ட்ஸ் அணியையும் வென்றன. கார்கில் செவன்ஸ் அணி, ஜான்சான் அணியையும்; விங்ஸ் ஆப் பையர் அணி, தடகாம் சி.எம்.ஆர்., அணியையும் வீழ்த்தின. ஜூனியர் போராளி அணி, ஜூனியர் எஸ்.கே., பிரதர்ஸ் அணியையும்; குறிச்சி ஸ்போர்ட்ஸ் கிளப் அணி, பாலக்காடு பரசக்தி அணியையும் வென்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement