Advertisement

சங்கமேஸ்வரர் கோயில் யானை உயிரிழப்பு

ஈரோடு, பவானி கூடுதுறையில் உள்ள சங்கமேஸ்வரர் கோயில் பெண் யானை வேதநாயகி சுமார் 40 ஆண்டுகளாக பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. 3 ஆண்டுகளாக இருக்கும் நீரிழிவு நோயால், காலில் ஏற்பட்ட புண் ஆறாமல் வேதநாயகி அவதியடைந்து வந்தது. 2 ஆண்டுகளாக புத்துணர்வு முகாமுக்கும் செல்லவில்லை. நோய் காரணமாக காலில் வீக்கம் ஏற்பட்டு நடக்க முடியாமலும், சரியாக உணவு உட்கொள்ள முடியாமலும் சிரமப்பட்டு வந்த யானைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வெள்ளியன்று யானை வேதநாயகி உயிரிழந்தது. பக்தர்கள் கண்ணீர் மல்க, அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கோயில் நடை அடைக்கப்பட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement