Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 27-11-2019 | Sports Roundup | Dinamalar

இந்திய ஜோடி தங்கம் தாய்லாந்தில் ஆசிய வில்வித்தை சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. காம்பவுண்டு கலப்பு பிரிவு பைனலில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி, சீன தைபேவின் இ சென், செய் சென் ஜோடியை 158-151 என்ற கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது. காம்பவுண்டு ஆண்கள், பெண்கள் அணிகளுக்கான பைனலில் தோற்ற இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் கிடைத்தது. ------------ சஞ்சு சாம்சன் வாய்ப்பு இந்தியா வந்துள்ள விண்டீஸ் அணி மூன்று போட்டிகள் கொண்ட 'டுவென்டி-20' தொடருக்கான இந்திய அணியில் ஷிகர் தவான் இடம் பெற்றிருந்தார். இவரது இடது கால் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் தவானுக்குப் பதில், விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் சேர்க்கப்பட்டார். ------------- கார்ன்வல் அபாரம் லக்னோவில் விண்டீஸ், ஆப்கானிஸ்தான் மோதும் டெஸ்ட் போட்டி நடக்கிறது. 'டாஸ்' வென்ற விண்டீஸ் பீல்டிங் தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 187 ரன்னுக்கு சுருண்டது. சுழலில் மிரட்டிய விண்டீசின் கார்ன்வல் 7 விக்கெட் சாய்த்தார். இது இவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. -------------- இங்கிலாந்து-நியூசி., மோதல் நியூசிலாந்து சென்றுள்ள இங்கிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் வென்ற நியூசிலாந்து 1-0 என தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகள் மோதும் இரண்டாவது மற்றும் கடைசி டெஸ்ட், நவம்பர் 29ம் தேதி ஹாமில்டனில் துவங்குகிறது. இதில் வெல்லும் பட்சத்தில் நியூசிலாந்து அணி கோப்பை வெல்லலாம்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement