LOGIN
dinamalar telegram
Advertisement

மாணவர்களுக்கு இலவச கிரிக்கெட் பயிற்சி

மாணவர்களின் கிரிக்கெட் திறனை வெளிக்கொணரும் விதமாக, 'தினமலர்' நாளிதழ், 'பூஸ்ட்' நிறுவனம் இணைந்து, சென்னையில் பல்வேறு இடங்களில் சிறப்பு முகாமை நடத்தின. சென்னை அயனாவரத்தில் உள்ள எஸ்டிலியோ ஸ்போர்ட்ஸ் அகாடமி'யில் நடந்த முகாமில் 11 முதல் 14 வயது வரையிலான 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்றனர். மாணவர்களின் 'பேட்டிங்', 'பவுலிங்', பீல்டிங், 'கீப்பிங்' திறமையை கிரிக்கெட் வல்லுநர்கள் பரிசோதித்தனர். பேட்டிங், பவுலிங், பீல்டிங்கில் அசத்திய சிறந்த நான்கு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு எஸ்டிலியோ ஸ்போர்ட்ஸ் அகாடமி'யில் உள்ள வலைப்பயிற்சி மையத்தில் 6 மாதங்களுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படும். கிரிக்கெட் பயிற்சிக்கு தேவையான உபகரணங்களை 'பூஸ்ட்', தினமலர் நிறுவனங்கள் இலவசமாக வழங்கி ஊக்கப்படுத்தவுள்ளன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement