Advertisement

அடிச்சு தூக்கிய 'விஸ்வாசம்' : டுவிட்டரில் நம்பர் 1 சாதனை

சினிமா பிரபலங்கள், சினிமா ரசிகர்கள் அதிகம் பயன்படுத்துவது டுவிட்டர். 'டிரெண்டிங்' என்ற பெயரில் அடிக்கடி மோதல்கள் நடக்கும். 2019ம் ஆண்டைப் பொறுத்தவரையில் 'விஸ்வாசம்' #Viswasam என்ற ஹேஷ்டேக் டுவிட்டரில் மிகவும் செல்வாக்குமிக்க தருணம் ஆக இந்திய அளவில் நம்பர் 1 இடத்தைப் பிடித்துள்ளது. அதாவது இந்த ஹேஷ்டேக்கைத்தான் பலரும் பயன்படுத்தி டுவீட் செய்துள்ளனர். இதற்கடுத்து, #LokSabhaElections2019, #CWC19, #Maharshi, #HappyDiwali ஆகியவை இடம் பிடித்துள்ளன. இந்த சாதனையைப் பற்றி 'விஸ்வாசம்' படக்குழுவினர், அஜித் ரசிகர்கள் நேற்று டுவிட்டரில் பரவலாகப் பதிவிட்டிருந்தனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விஜய் ரசிகர்கள் 'விஷவாசம்' என்ற அர்த்தத்தில் 'visawasam' என்ற ஹேஷ்டைக்கை டிரெண்டிங்கில் கொண்டு வந்து இதிலும் சண்டையிட்டுக் கொண்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement