கேரளாவின் அட்டப்பாடி வனத்தில் போலீசார் மாவோயிஸ்டு இடையே அக்., 28 ம் தேதி துப்பாக்கிச் சூடு நடைபெற்றது. சுட்டுக் கொல்லப்பட்ட ஒரு பெண் யாரென தெரியாத நிலையில், அவர், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜிதா என்று தெரியவந்துள்ளது. இந்நிலையில், அரசாங்கத்தின் உதவி இல்லாமல், அஜிதாவின் உடலை பார்த்து அடையாளம் கூற முடியாது, என, அஜிதாவின் தாய் சொர்ணம் தெரிவித்துள்ளார்.