Advertisement

லாரி விபத்தில் சிக்கிய பெண்; அதிமுக கொடிதான் காரணமா?

கோவை விமான நிலையத்தில் இருந்து காரில் சேலத்திற்கு சென்ற முதல்வரை வரவேற்க, சிட்ரா பகுதியில் சாலையில் இருபுறங்களிலும் அதிமுகவினர், இரும்பு கம்பியில் கட்சிக்கொடிகளை கட்டி நட்டு வைத்திருந்தனர். இந்நிலையில், அவிநாசிரோடு, கோல்டுவின்ஸ் அருகே மொபட்டில் வந்த இளம்பெண் ராஜேஸ்வரி, பைக்கில் வந்த நித்யானந்தம் ஆகியோர் மீது லாரி மோதியது. இதில், ராஜேஸ்வரியின் கால் எலும்பு முறிந்தது. நித்தியானந்தமும் காயமடைந்தார். சாலையோரத்தில் வைக்கப்பட்டிருந்த கட்சிகொடிகம்பம் சாய்ந்ததால்தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தகவல் பரவியது. இதையடுத்து அப்பகுதியில் இருந்த கொடி கம்பங்களை மட்டும் அதிமுகவினர் அப்புறப்படுத்தினர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement