Advertisement

மலைப்பாதையில் கவிழ்ந்தது வெங்காய லாரி; டிரைவர் பலி

கர்நாடகாவில் இருந்து வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டுவந்த லாரி, திருப்பூர் செல்வதற்காக, சத்தியமங்கமலம் திம்பம் மலைப்பாதையில் வந்தது. 26வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது, சாலையோர பாறையில் மோதி லாரி கவிழ்ந்தது. சாலை முழுவதும் வெங்காயம் கொட்டிகிடந்தன. லாரியை ஓட்டிவந்த திருப்பூரை சேர்ந்த டிரைவர் ஸ்ரீதர் உயிரிழந்தார். அதிக பாரம் ஏற்றி வந்ததால் இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. லாரி விபத்தால், 6 மணிநேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் அதிக பாரம் கொண்ட லாரிகள் செல்ல கட்டுப்பாடு இருந்தபோதும், அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்படுவது தொடர்கிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement