Advertisement

முதல்வருடன் காலால் செல்பி: வைரலாகும் போட்டோ

கேரளாவை சேர்ந்த மாற்றத்திறனாளி வாலிபர் பிரணவ்வுக்கு இரண்டு கைகளும் கிடையாது. கால்களை கைகளை போல் பயன்படுத்தி வந்தார். லோக்சபா தேர்தலில் கூட மின்னணு ஓட்டு இயந்திரத்தில் கால்களை பயன்படுத்தி ஓட்டு போட்டார். இந்நிலையில், கேரள மாநில நிவாரணத்திற்கு நிதி அளிக்க பிரணவ், முதல்வர் பினராயி விஜயனை சந்தித்தார். அப்போது, பிரணவ் கால்களை, முதல்வர் பினராயி விஜயன் தனது கைகளால் பிடித்து வரவேற்றார். நிவாரண நிதி அளித்த பின்னர், முதல்வருடன், பிரணவ் கால்கள் மூலம் செல்பி எடுத்துக் கொண்டார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement