Advertisement

வடபழனியில் அன்னாபிஷேகம் விழா

அருள்மிகு வடபழனி ஆண்டவர் திருக்கோவிலில் திங்களன்று அன்னாபிஷேகம் சிறப்பான முறையில் நடைபெற்றது. கோவிலின் தென்மேற்கு பகுதியில் தனி சன்னதியில் எழுந்தருளும் சொக்கநாதருக்கு சிறப்பு பூஜைகளுடன் அன்னாபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு ,50க்கும் மேற்பட்ட வேத விற்பன்னர்கள் வேதங்களை ஓதினர். சிவாச்சாரியார் சொக்கநாதருக்கு சிறப்பு அபிஷேகங்களை செய்தார். பின்னர், அன்னத்தால் அலங்காரம் செய்யப்பட்டு பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அவருக்கு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. அன்னாபிஷேகத்தை காண நூற்றுக்கணக்கான மக்கள் கோவிலில் திரண்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement