சென்னையில் நடைபாதைகள்
சரியாக பராமரிக்கபடவில்லை என சென்னை
ஹைகோர்ட்டில் பொது நல மனு தாக்கல்
செய்யப்பட்டுள்ளது.
நடைபாதைகள் ஆக்கிரமிக்கப்பட்டு,
கடைகள் வைக்கப்பட்டுள்ளதாலும்,
ஆங்காங்கே வாகனங்கள் நிறுத்தபட்டுள்ளதாலும்
பொதுமக்களுக்கு கடும் சிரமம் ஏற்பட்டுள்ளதாக
அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனு சத்தியநாராயணன் மற்றும் ஷேஷசாயி
அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
மாநகராட்சி கடை நிலை ஊழியர்களே
நடைபாதைகளில் கடைகள் அமைப்பதிருப்பதாக
கூறிய நீதிபதிகள், உயர்நீதிமன்றத்திற்கு எதிரே
உள்ள என்.எஸ்.சி.போஸ் நடைபாதையில்
நிறுத்தி வைக்கபட்டுள்ள இருசக்கர வாகனங்கள்
உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டனர்.
இது குறித்து புதனன்று அறிக்கை தாக்கல்
செய்ய சென்னை மாநகராட்சிக்கு அறிவுறுத்தப்பட்டது.