சேலம், ஆத்தூர் அருகே, மல்லியக்கரை ஊராட்சிக்குட்பட்ட
கருத்தராஜாபாளையம் கிராம மக்கள்,
மாடி வீடு கட்டுவது தெய்வ குற்றம் என நம்புவதால்,
140 ஆண்டுகளுக்கு மேலாக கூரை மற்றும் ஓட்டு
வீடுகளில் மட்டுமே வாழ்ந்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் எங்கேயும்
கான்கிரீட் மேற்கூரை வீடுகளோ,
மாடி வீடுகளோ இல்லை.
குலதெய்வமான பெரியசாமி
ஊரை காப்பாற்றி வருவதாக நம்பும் மக்கள்,
சுவாமியே கீழே இருக்கும்போது,
மாடியில் நின்று சுவாமியை பார்க்க கூடாது என்பதால்,
மாடிவீடோ, படிகள் வைத்தோ வீடுகள் கட்டுவதில்லை.
அதையும் மீறி கட்டினால்,
அசம்பாவிதங்கள் நிகழும் என்கிறார்கள்.