நெல்லை மாவட்டம் தென்காசி அருகில் மேலகரம் பகுதியில், ஜெமிலா என்பவர், பிளஸ்ஸிங் ஹோம் நடத்தி வருகிறார். செவ்வாயன்று அதிகாலை நான்கு மணி அளவில், 12 முதல் 16 வயதுக்குட்பட்ட நான்கு மாணவிகள், காப்பகத்தில் இருந்து மாயமாகினர். தென்காசி டி.எஸ்.பி கோகுல கிருஷ்ணன், ஹோமில் தங்கி படிக்கும் பிற மாணவிகளிடம் நேரில் விசாரணை நடத்தினார்.