Advertisement

கன்னித்தன்மை: நெட்டிசன்களைத் திட்டிய நிவேதா தாமஸ்

‛தலைவி' படப்பிடிப்பு தொடங்கியது மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை படமாக்குவதாக அறிவித்துள்ளனர். அதில் இயக்குனர் விஜய்யும் ஒருவர். ‛தலைவி' என்ற பெயரில் இவர் இயக்கும் படத்தில் ஜெயலலிதா வேடத்தில் கங்கனா நடிக்கிறார். ஜி.வி.பிரகாஷ் இசை அமைக்கிறார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு லண்டன் சென்ற படக்குழு படத்தில் நடிப்பவர்களுக்கு மேக்-அப் டெஸ்ட் எடுத்தது. இதில் அனைத்து கேரக்டர்களுக்கும் திருப்தி ஏற்பட்டதால் நேற்று படத்தை முறைப்படி தொடங்கி விட்டார்கள். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகிறது. இதற்கிடையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா, இப்படம் தொடர்பாக வழக்கு தொடர்ந்துள்ளார். இதில் இயக்குனர் விஜய்க்கும் கோர்ட் நோட்டீஸ் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது. ------------------- தமன்னா செம்ம ஹாட் கேடி படத்தில் தமிழுக்கு வந்தவர் தமன்னா. இப்போதுவரை தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தற்போது விஷாலுடன் ஆக்சன் படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்துள்ளார். சைராவை தொடர்ந்து இந்த படத்திலும் தனது நடிப்புக்கு பாராட்டு குவியும் என எதிர்பார்க்கிறார். சினிமாவில் தமன்னா நடிக்க வந்து 15 ஆண்டுகளாகி விட்டதால் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகிறார்கள். இந்நிலையில் கவர்ச்சியான போட்டோ ஷூட் ஒன்றை எடுத்து சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த போட்டோக்கள் வைரலாகி வருகின்றன. --------------- அட, கபில்தேவ் மாதிரியே இருக்காரே? இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்காகவே தயாராகிக் கொண்டிருக்கும் படம் என '83' படத்தைச் சொல்லலாம். கபீர் கான் இயக்கத்தில் ரன்வீர் சிங், தீபிகா படுகோனே, தமிழ் நடிகர் ஜீவா உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்திய அணிக்கு ஒரு நாள் தொடரின் உலகக் கோப்பையை 1983ம் ஆண்டு முதன் முதலில் வாங்கிக் கொடுத்த கேப்டன் கபில் தேவ்வின் வாழ்க்கை வரலாற்றுப் படமான '83' படத்தின் புதிய போட்டோ ஒன்றை கபில்தேவ் ஆக நடிக்கும் ரன்வீர் சிங் வெளியிட்டு, 'நட்ராஜ் ஷாட்', 'கபில்தேவ் ஆக ரன்வீர்' எனக் குறிப்பிட்டுள்ளார். கபில்தேவ் எப்படி அவருடைய அந்த பேவரிட் ஷாட்டை அடிப்பாரோ அப்படியே அதை பிரதிபலிப்பதாக உள்ளது ரன்வீர் சிங்கின் ஷாட். அதைப் பார்த்த கபில் தேவ், 'ஹாட்ஸ் ஆப் ரன்வீர்' என பாராட்டியுள்ளார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement