தமிழகத்தில் ஆக்ரமிப்பில் உள்ள
கோவில் நிலங்களை
மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள
திருத்தொண்டர் சபை நிறுவன தலைவர் ராதாகிருஷ்ணன்
கரூர் அடுத்த வெண்ணமலை
முருகன் கோயிலில் ஆய்வு மேற்கொண்டார்.
பின் பேசிய அவர்,
வெண்ணைமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான
500 ஏக்கர் நிலங்கள் ஆக்ரமிக்கப்பட்டுள்ளது என்றார்.
கோயிலுக்கு சொந்தமான இடங்களை
நூறு ஆண்டுகளாக ஆக்ரமித்திருந்தாலும் அது செல்லாது.
கோவிலுக்கு வாடகை செலுத்துவதாக
எழுத்துப்பூர்வமாக ஒப்புக் கொண்டால்
அவர்களுக்கு நியாயமான வாடகை நிர்ணயிக்கப்படும் என்றார்.