ஈரோடு, தட்டாங்காடு பகுதியை சேர்ந்தவர் சண்முகசுந்தரம்,
இரு தினங்களுக்கு முன்பு குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு
வீடு திரும்பியபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது.
மேலும், பீரோவில் இருந்த 27 சவரன் நகைகள் மற்றும்
40 ஆயிரம் ரூபாயும் கொள்ளைபோயிருந்தது தெரியவந்தது.
வீரப்பன்சத்திரம் போலீசார் கொள்ளை தொடர்பாக விசாரிக்கின்றனர்.