Advertisement

ஜெர்மன் மாப்பிள்ளையை கரம்பிடித்த கொங்கு பெண்

கோவை, பன்னிமடையை சேர்ந்த சுப்பிரமணியம் - கலாவதி தம்பதியின் மகள் வித்யாபிரபா கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துவிட்டு, ஜெர்மன்நாட்டில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றும் மைக்கேல் ஷீல்டஸ் என்பவருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. அந்தநட்பு நாளைடைவில் காதலாக மாறியது. திருமணம் செய்துகொள்ள முடிவு செய்த இருவரும், தங்களின் பெற்றோர்களின் சம்மதத்தை பெற்றனர். இதையடுத்து, கோவை வெள்ளகிணர் பிரிவில் உள்ள மண்டபத்தில் மைக்கேல் -வித்யா திருமணம் தமிழ் கலாச்சாரப்படி நடந்தது. மைக்கேலின் உறவினர்கள், நண்பர்கள், தமிழ்கலாச்சார உடையணிந்து திருமணத்தில் கலந்து கொண்டனர். ஆனால், மைக்கேலின் பெற்றோரால் வரமுடியவில்லை என கூறப்படுகிறது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement