Advertisement

மகாவில் ஆட்சி அமைக்க மாட்டோம்; பாஜஅறிவிப்பு

மகாராஷ்ட்ர தேர்தலில் பா.ஜ., சிவசேனா கூட்டணி மெஜாரிட்டி பெற்றபோதிலும் முதல்வர் பதவிச் சண்டையால் ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. அதிக இடங்களைப் பிடித்த பா.ஜ.வை ஆட்சி அமைக்க கவர்னர் கோஷ்யாரி அழைப்பு விடுத்தார். என்ன செய்வது என? பட்னவிஸ் தலைமையில் பா.ஜ. நிர்வாகிகள் ஞாயிறன்று 2 முறை தீவிரமாக ஆலோசித்தனர். பா.ஜ.வின் பலம் 105தான். மெஜாரிட்டிக்கு 40 சீட் குறைவு. இப்படிப்பட்ட சூழலில் பா.ஜ. தனியாக ஆட்சி அமைக்க முயற்சி செய்வது சரியாக இருக்காது என, பல தலைவர்களும் கூறினர். அதை பட்னவிஸ்சும் ஏற்றார். இதையடுத்து, பா.ஜ. ஆட்சி அமைக்க உரிமை கோராது என, கவர்னருக்கு தெரிவிக்கப்பட்டது.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement