Advertisement

மாணவர்களுக்கான கிரிக்கெட் வீரர்கள் தேர்வு

கோவை, காளம்பாளையம் மான்செஸ்டர் ஸ்போர்ட்ஸ் அகாடமி, தினமலர் நாளிதழ் மற்றும் 'பூஸ்ட்' நிறுவனம் சார்பில், இளம் கிரிக்கெட் வீரர்களை கிரிக்கெட் போட்டியில் ஊக்கப்படுத்தும் விதமாக பல்வேறு இடங்களில் வீரர்கள் தேர்வு நடக்கிறது. ஞாயிறன்று காளம்பாளையத்தில் நடந்த தேர்வில் 8 முதல் 14 வயதுக்கு உட்பட்ட பிரிவுகளில், 200க்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றனர். வீரர்களின், 'பேட்டிங்', 'பவுலிங்', 'கீப்பங்', உடல்திறன், விளையாட்டு நுணுக்கம் போன்ற பல்வேறு திறமைகள் அடிப்படையில் வீரர்கள் தேர்வு நடந்தது. சிறந்த வீரர்களை தேர்வு செய்து, மான்செஸ்டர் அகாடமியில் ஆறு மாதத்திற்கு தேவையான பயிற்சி, விளையாட்டு உபகரணங்களை 'பூஸ்ட்' நிறுவனம் ஏற்படுத்தி தருகிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement