Advertisement

ஒட்டீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம்

சென்னை ஒட்டியம்பாக்கத்தில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்ட பழமை வாய்ந்த ஸ்ரீமங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, நான்காம்கால பூஜை, ஸ்ரீ மங்களாம்பிகை உடனுறை ஒட்டீஸ்வரர் பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம், பஞ்ச மூர்த்திகள் மாட வீதி உலா நடைபெற்றது. பல்வேறு சிறப்பு யாகங்கள், பூஜைகள், ஹோமங்களை நடத்தி விமான கலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. ஒட்டீஸ்வரர் கோயிலுக்கு வந்தால் குழந்தை, திருமண வரம் கைகூடும்; கல்வி ஆரோக்கியம், செல்வம் வந்துசேரும் என்பது ஐதீகம். 12 வருடம் கழித்து கும்பாபிஷேகம் நடந்ததால் பக்தர்கள் திரளாக பங்கேற்று சிவபெருமானை வழிபட்டனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement