தஞ்சையில் 1000 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட
உலகப்புகழ் பெற்ற தஞ்சை பெருவுடையார்
கோவிலின், பெருவுடையாருக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தம் செல்வதற்காக இயற்கையான
ஒரே பாறையின் மீது கட்டப்பட்ட
மகாலிங்க சுவாமி கோவிலின் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
படகுகள் மூலம் சென்றும்,
கட்டுமரத்தின் மூலம் சென்றுமே
இந்த கோவிலின் ஈசனை வழிபட முடியும்.
ஒரு தனிப்பாறையில் பிரம்மாண்ட குளத்தின்
நடுவே கோவில் இருப்பது இங்கு மட்டும் தான்
உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது