Advertisement

தொடர் கொள்ளை தந்தை, மகனிடம் 82 பவுன் பறிமுதல்

ஓசூர் நகர காவல்நிலைய ஆய்வாளர் லட்சுமணதாஸ் தலைமையில் குற்றப்பிரிவு போலீசார், வெள்ளியன்று தளி ரயில்வே கேட் ஜங்ஷன் பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக இரு சக்கர வாகனத்தில் வந்த இருவரை நிறுத்தி போலீசார் விசாரித்தனர். அப்போது, அவர்கள் இருவரும் முன்னுக்குப் பின் முரணான தகவலை அளித்ததனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் அவர்கள், கர்நாடக மாநிலம், கோலார் மாவட்டம், மாலுார் அடுத்த சந்தஹள்ளி அருகே உள்ள திருமலட்டி கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷ் மற்றும் தர்மா என்பதும், இருவரும் தந்தை, மகன் என்பதும் தெரியவந்தது. இவர்கள் ஓசூர் முனீஸ்வர் நகர், அலசநத்தம் ரோடு, குறிஞ்சி நகர், காரப்பள்ளி, அபிராமி கார்டன், ராயக்கோட்டை அடுத்த ஒடையாண்டஹள்ளி ஆகிய இடங்களில், பூட்டிய வீடுகளை உடைத்து, நகை மற்றும் பணத்தைத் திருடியது தெரிந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 82 பவுன் தங்க நகைகள் மற்றும் 200 கிராம் வெள்ளி பொருட்களைப் பறிமுதல் செய்தனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement