Advertisement

விளையாட்டுச் செய்திகள் | Sports News 07-11-2019 | Sports Roundup | Dinamalar

ரோட்ரிகோ 'ஹாட்ரிக்' ஐரோப்பாவில் சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடர் நடக்கிறது. மாட்ரிட் நகரில் நடந்த லீக் போட்டியில் ரியல் மாட்ரிட், கலாட்சரே அணிகள் மோதின. இதில் ரியல் மாட்ரிட் வீரர் ரோட்ரிகோ 'ஹாட்ரிக்' கோல் அடித்து அசத்தினார். எதிரணி சார்பில் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில், ரியல் மாட்ரிட் 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது. ........... காஷ்யப் தோல்வி சீனாவின் புஜோவில் சீன ஓபன் பாட்மின்டன் தொடர் நடக்கிறது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் காஷ்யப், டென்மார்க்கின் விக்டரை எதிர் கொண்டார். இதில் ஏமாற்றிய காஷ்யப் 13-21, 19-21 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்தார். .......... இந்தியப்பெண்கள் வெற்றி விண்டீஸ், இந்தியா பெண்கள் அணிகள் மோதிய மூன்றாவது ஒரு நாள் போட்டி ஆன்டிகுவாவில் நடந்தது. முதலில் விளையாடிய விண்டீஸ் அணிக்கு ஸ்டாபானியே டெய்லர் மட்டும் அரை சதம் விளாச, 50 ஓவரில் 194 ரன்கள் எடுத்தது. இந்திய அணிக்கு ரோட்ரிக்ஸ், மந்தனா அரை சதம் அடித்து கைகொடுக்க, 42.1 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 195 ரன்களுக்கு எடுத்து, 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ............... டில்லி அணியில் அஷ்வின் இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் அஷ்வின். ஐ.பி.எல்., தொடரில் பஞ்சாப் அணி கேப்டனாக உள்ளார். இதற்கிடையே, அணியின் புதிய பயிற்சியாளராக 'ஜாம்பவான்' கும்ளே நியமிக்கப்பட்டார். இவர் 'சீனியர்' சுழற்பந்து வீச்சாளர் வேண்டாம் என முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. இதனால், அஷ்வின் பஞ்சாப் அணியிலிருந்து வெளியேறி டில்லியில் இணைய உள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement