Advertisement

கமல் குடும்ப விழாவில் பூஜா குமார்

‛காதல் ரோஜாவே' படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமாகி, கமல்ஹாசன் உடன் ‛விஸ்வரூபம்' படம் மூலம் பிரபலமானார் பூஜா குமார். தொடர்ந்து அவரின் விஸ்வரூபம் 2, உத்தம வில்லன் படங்களில் நடித்தார். தொடர்ந்து கமல் உடன் பயணித்து வருகிறார். இருவரும் வெளிநாடுகளுக்கு சென்ற வந்த புகைப்படங்கள் கூட வெளியாகின. இந்நிலையில் கமல்ஹாசனின் பிறந்தநாளான இன்று பரமக்குடியில் அவரது அப்பா சீனிவாசனின் சிலையை திறந்து வைத்தார். நீண்ட நாட்களுக்கு பின்னர் கமல்ஹாசன் குடும்பத்தினர் ஒரே இடத்தில் ஒரே நாளில் சந்தித்தது குடும்பத்தினர் இடையே மகிழ்ச்சியை தந்துள்ளது. அதேசமயம் இந்த குடும்ப விழாவில் குடும்ப உறுப்பினர்கள் உடனான போட்டோவில் பூஜா குமார் இருப்பது ரசிகர்கள் இடையே சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பூஜா குமார் எப்போது கமல் குடும்ப உறுப்பினர் ஆனார் என ரசிகர்கள் பலர் சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement