Advertisement

களை கட்டப்போகும் கமல்ஹாசன் பிறந்தநாள் விழா

கமல்ஹாசனின் 65வது பிறந்தநாள் மற்றும் திரையுலகில் அவர் 60 ஆண்டுகளை கடந்ததை கொண்டாடும் விதமாக நவ., 7, 8, 9 தேதிகளில் ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் தொடர் கொண்டாட்டங்கள் நடப்பதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. தற்போது இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நவ.,7ல் பரமக்குடியில் தன் தந்தையின் சிலையை அவரது இல்லத்தில் திறந்து வைக்கிறார் கமல். தொடர்ந்து நவ.,8ல் எல்டாமஸ் ரோட்டில் உள்ள தனது தயாரிப்பு நிறுவனத்தின் புதிய அலுவலகத்தையும், அங்கு சினிமாவில் தன் குருநாதரான மறைந்த இயக்குனர் கே.பாலச்சந்தரின் சிலையையும் திறந்து வைக்கிறார். அன்று மாலை 3 மணிக்கு சத்யம் திரையரங்கில் ‛ஹேராம் படம்' சிறப்பு காட்சியாக திரையிடப்படுகிறது. தொடர்ந்து நவ.,9ல் நடைபெற இருந்த இளையராஜா நிகழ்ச்சி, நவ.,17க்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாய் நடக்கும் இந்த இசை நிகழ்ச்சி உடன் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழாவும் நடத்துகின்றனர். நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் பங்கேற்கின்றனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement