Advertisement

வேளாண் கழிவுகளை எரிப்பதை நிறுத்துங்கள்: சுப்ரீம் கோர்ட்

டில்லியில் காற்று மாசின் அளவு அபாய கட்டயத்தை எட்டியுள்ளதால், நவம்பர் 15 வரை ஒற்றை-இரட்டை இலக்க வாகன கட்டுப்பாட்டை டில்லி அரசு அமல்படுத்தி உள்ளது. இதை மீறுபவர்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும். பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த வேளாண் கழிவுகளை எரிப்பதை நிறுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. விவசாய கழிவுகளை எரிப்பதை தடுக்காத அதிகாரிகளை பதவியில் இருந்து நீக்குவது போன்ற கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநில செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. பயிர் கழிவுகளை ஏரிப்பதால் ஏற்படும் புகையால்தான் காற்று மாசு அதிகரித்துள்ளதாக டில்லி போக்குவரத்து துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் கூறியுள்ளார். வாகன கட்டுப்பாடு, காற்று மாசை குறைக்க நிச்சயம் உதவும் என்றும் கூறியுள்ளார். இதனிடையே, டெல்லி துணை முதல்வர் மணீஸ் சிசோடியா, தனது வீட்டில் இருந்து அலுவலகத்திற்கு சைக்கிளில் சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement