Advertisement

'அரோகரா' முழக்கத்துடன் சூரசம்ஹாரம் கோலாகலம்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி விழாவையொட்டி சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. பச்சை நாயகி அம்மன் சன்னதியில் சக்தி வேல் வாங்கி வந்த முருகப்பெருமான், சூரபத்மனை வதம் செய்தார். கோவை பேரூர் பட்டீசுவரர் கோயிலில் பாலதண்டாயுதபாணி சுவாமி திருவீதி உலா வந்து சூரனை சம்ஹாரம் செய்யும் நிகழ்ச்சி நடைபெற்றது. திரளான பக்தர்கள் அரோகரா முழக்கமிட்டனர். கோவை நகரில் உள்ள சங்கமேஷ்வரர் கோயிலில் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நான்கு மாட வீதிகளில் ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளிய முருகப்பெருமான், சூரனை வதம் செய்தார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement