Advertisement

அரோகரா கோஷம் விண்ணதிர திருச்செந்தூரில் சூரசம்ஹாரம்

திருச்செந்துார் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், சஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான, சூரசம்ஹாரம் சனிக்கிழமை நடைபெற்றது. சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன், தங்க சப்பரத்தில் எழுந்தருளி, சண்முகவிலாச மண்டபத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். தொடர்ந்து, சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரையில் எழுந்தருளி, சூரனை வதம் செய்யும் சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடைபெற்றது. கஜமுகன், சிங்கமுகன், சூரபத்மனாய் அடுத்தடுத்து வலம் வந்து ஆணவத்துடன் போரிட்ட சூரனை, சுவாமி ஜெயந்திநாதர் தன்னுடையே வேலால் சம்ஹாரம் செய்தார். அப்போது, அங்கு கூடியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் பக்தர்கள், "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என விண்ணதிர முழக்கமிட்டனர். இறுதியில் மாமரமும், சேவலுமாக உருமாறி போரிட்ட சூரனை சேவற்கொடியாகவும், மயிலாகவும் மாற்றி, சுவாமி ஆட்கொண்டார். ஆறு நாள் சஷ்டி விரதமிருந்த பக்தர்கள் கடலில் புனித நீராடி, விரதத்தை முடித்தனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement