Advertisement

கோவைக்கு 'MEMU' ரயில் சேவை

மேட்டுப்பாளையம் - கோவை இடையே பயணிகள் ரயில் 11 பெட்டிகளுடன் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரயிலுக்கு மாற்றாக இரண்டு பக்கமும் இயக்கப்படும் இன்ஜின் கொண்ட மெமு எனப்படும் mainline electric multiple unit (MEMU) ரயில் வியாழன் முதல் இயக்கப்படுகிறது. இரண்டு புறமும் இன்ஜின் இருப்பதால், மறு மார்க்கத்தில் இயக்கும்போது, இன்ஜின் இணைப்புக்கான நேரம் மிச்சப்படுத்தப்படும். அத்துடன் 100 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. மெமு ரயிலில் எட்டு இணைப்பு பெட்டிகள் உள்ளன. இதில் 614 பேர் அமர்ந்தும் 1788 பேர் நின்றுகொண்டு பயணிக்க முடியும். இந்த பெட்டிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன. அடுத்து வரும் ஸ்டேஷன் பற்றிய அறிவிப்பு எல்.இ.டி., டிஸ்பிளே போர்டில் தெரிவதோடு, ஸ்பீக்கரிலும் அறிவிக்கப்படும். மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான தூரத்தை 45 நிமிடங்களில் கடக்கும் மெமு ரயில், மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 8.15, 10.30, பிற்பகல் 1.15 மணிக்கு கிளம்பும். கோவையில் இருந்து காலை 9.30, 11.50 க்கு கிளம்பும். இதே போல், பாலக்காடு, பொள்ளாச்சி, திருப்பூருக்கும் மெமு ரயில்கள் இயக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement