Advertisement

ரஜினியின் அடுத்த படம் இவருக்கா? நடந்தால் மரண மாஸ்

தர்பார் படத்தை முடித்துவிட்ட நடிகர் ரஜினிகாந்த், அடுத்து, சிறுத்தை சிவா இயக்கத்தில் தனது 168வது படத்தில் நடிக்க ஆயத்தமாகி வருகிறார். இதை அடுத்தும் ஒரு படத்தில் நடிக்க, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், கே.எஸ்.ரவிக்குமாரிடம் கதை கேட்டுள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் ‛பாகுபலி' புகழ் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் ரஜினி நடிக்க பேசி வருகின்றனர். தற்போது ஆர்.ஆர்.ஆர்., படத்தை இயக்கி வரும் ராஜமவுலி இந்தப் படத்தை முடிப்பதற்கும், ரஜினி, சிவா படத்தை நடித்து முடிப்பதற்கும் சரியாக இருக்கும் என்கிறார்கள். இந்த கூட்டணி நடக்கும் பட்சத்தில் அது நிஜமாகவே மரண மாஸாக தான் அமைய போகிறது. 2021ல் தான் சட்டசபை தேர்தல் நடக்கிறது. அப்போது தான் அரசியலில் களம் காண உள்ளார் ரஜினி. அதற்குள் முடிந்த வரை படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளார் ரஜினி.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement