Advertisement

குமரியில் வீசிய சூறைகாற்று: வாழைமரங்கள் சேதம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் திங்களன்று இரவு மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் கனமழை மற்றும் சூறைக்காற்று வீசியது. நாகர்கோவில் அருகே சீதப்பால், தென்பாறை, மண்ணடி பகுதிகளில் மூன்று மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. அங்கு பயிரிடப்பட்டிருந்த ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் முறிந்து சேதமாகி உள்ளன. வாழைக்கு உரிய நிவாரணங்களை உடனடியாக மாவட்ட நிர்வாகம் வழங்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement