Advertisement

'பிகில்' - 'குண்டம்மா' வசனத்திற்கு கடும் எதிர்ப்பு

அட்லி இயக்கத்தில் விஜய், நயன்தாரா நடித்து வெளிவந்துள்ள 'பிகில்' படத்தில் பெண்களைச் சிறுமைப்படுத்தும் காட்சி ஒன்றுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. பெண்கள் கால்பந்து அணியில் குண்டான வீராங்கனையாக நகைச்சுவை நடிகரான ரோபோ சங்கர் மகள் இந்திரஜா நடித்துள்ளார். ஒரு காட்சியில் அவரை விஜய், 'குண்டம்மா, குண்டம்மா' என கிண்டலடிக்கிறார். உடல் தோற்றத்தை வைத்து சினிமாவில் நகைச்சுவைக் காட்சிகள் வருவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் என எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதற்கு முன் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 'சிவாஜி' படத்தில் கருப்பு நிறப் பெண்களைப் பார்த்து 'அங்கவை, சங்கவை' என்று வைக்கப்பட்ட கிண்டலான காட்சிக்கு எதிர்ப்பு எழுந்தது. ஷங்கரின் முன்னாள் உதவியாளரான அட்லியும் இப்படி ஒரு காட்சியை வைத்து எதிர்ப்புகளைத் தேடி கொண்டிருக்கிறார்.
Share

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement