Advertisement

கோவா கடலில் தத்தளிக்கும் குமரி மீனவர்கள்

குமரி மாவட்ட மீனவர்களுக்கு அரசு வழங்கிய புயல் எச்சரிக்கை காரணமாக, அருகிலுள்ள மீன்பிடித் துறைமுகங்களில் கரைசேர்ந்துள்ளனர். கோவா மாநில ஆழ்கடல் பகுதியில் 40-க்கும் அதிகமான விசைப்படகுகள் சூறைக்காற்று காரணமாக படகை கரை நோக்கி செலுத்த இயலாமல் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும், குறிப்பாக 'எல்ஷடாய் மற்றும் ஸ்டார் ஆப் தி சி விசைப்படகுகளில் உள்ள, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 32 மீனவர்கள், தற்போது தொடர்பில் இல்லை என்று கரை சேர்ந்த மீனவர்கள் தெரிவித்துள்ளனர். காற்று வீசுகின்ற பகுதியில் இரண்டு விசைப்படகுகளும் வந்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. எனவே புயலில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மீனவர்களை கடலோர காவல் படையின் மூலம் பாதுகாப்பாக கரை சேர்க்க வேண்டும் என குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்திற்கு, குளச்சலைச் சேர்ந்த தெற்காசிய மீனவர் தோழமை பொதுச் செயலாளர் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும் நாகர்கோவில் மற்றும் மீன்வளத்துறை உதவி இயக்குனர்களுக்கும் வாட்ஸ் அப் மூலம் தகவல் அனுப்பியுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement