Advertisement

லைசென்ஸ் இல்லாத பார்களுக்கு சீல்

புதுக்கோட்டை மாவட்டத்தில் 143 அரசு மதுபான கடைகள் உள்ளன. கடந்தமாதம் 141 மதுபான கூடங்களுக்கான டெண்டர் விடப்பட்டது. இதில் 70க்கும் மேற்பட்டோர் அனுமதி பெற்று மதுபான கூடங்களை நடத்தி வருகின்றனர். பல உரிமையாளர்கள் ஒப்பந்தத்தொகை செலுத்தாமல் சட்டவிரோதமாக மதுபான கூடங்களை நடத்தி வருவதாக புகார்கள் எழுந்தன. மதுரை மண்டல டாஸ்மாக் பறக்கும்படை சப் கலெக்டர் பாஸ்கரன் தலைமையிலான குழுவினர் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள 52 கடைகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர், ஒப்பந்ததொகையை செலுத்தாமல் சட்டவிரோதமாக மதுபானகூடம் நடத்திவந்த 7 கடைகளை பூட்டி சீல்வைத்தனர். கடைகளின் உரிமையாளர்கள் மீது வழக்கு பதிந்து கைதுசெய்யவும் காவல்துறையினருக்கு பரிந்துரை செய்தனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement