Advertisement

மின்னல் தாக்கி 4 பெண்கள் பலி

புதுக்கோட்டை மாவட்டத்தில் செவ்வாய் காலை முதலே விட்டு விட்டு மழை பெய்தது. வைத்துார் கிராமம் அருகே செம்பாட்டூர் கீழமுட்டுக்காடு பகுதியில் நிலக்கடலை பறிக்க 38 பெண் தொழிலாளர்கள் சென்றனர். வயலில் வேலை பார்த்துக்கொண்டிருந்தபோது திடீரென மழை பெய்ததால் தார்ப்பாய் கூடாரம் அமைத்து ஒதுங்கினர். அப்போது இடியுடன் மின்னல் தாக்கியதில் சாந்தி, விஜயா, லட்சுமியம்மாள், கலைச்செல்வி ஆகிய நான்கு பேர் பரிதாபமாக இறந்தனர். 20 பேர் தீக்காயமடைந்தனர். புதுக்கோட்டை மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர்களுக்கு கலெக்டர் உமா மகேஸ்வரி ஆறுதல் கூறினார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement