Advertisement

பி.சி.சி.ஐ. புதிய தலைவர் கங்குலி

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராகிறார், சவுரவ் கங்குலி. பி.சி.சி.ஐ. தலைவர் பதவிக்கு கங்குலியை தவிர வேறு யாரும் வேட்பு மனு செய்யாததால் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுகிறார். பி.சி.சி.ஐ. செயலாளராக உள்துறை அமைச்சர் அமித்ஷா மகன் ஜெய் ஷா தேர்வாகிறார். அக்டோபர் 23ம்தேதி பிசிசிஐ பொதுக்குழு கூடும்போது புதிய தலைவராக கங்குலி பதவி ஏற்கிறார். அது முதல் பி.சி.சி.ஐ. சுதந்திரமாக செயல்படும். பி.சி.சி.ஐ. அலுவல்களை கவனிக்க சுப்ரீம் கோர்ட்டால் நியமிக்கப்பட்ட நிர்வாகக்குழுவின் செயல்பாடுகள் அத்துடன் முடிவுக்கு வரும். ''பல்வேறு குற்றச்சாட்டுகளால் பிசிசிஐயின் இமேஜ் பாதிக்கப்பட்டது. இன்னும் சில மாதங்களில் இந்திய கிரிக்கெட் இயல்பு நிலைக்கு திரும்பும். பி.சி.சி.ஐ.யில் எல்லா பிரச்னைகளும் தீரும். அதற்கான முயற்சிகளை மேற்கொள்வேன்; முதல் தர கிரிக்கெட்டை மேம்படுத்துவதுதான் எனது முதல் பணி'' என்றார் கங்குலி. 2020 ஜூலை வரைதான் கங்குலி பிசிசிஐ தலைவராக இருப்பார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement