Advertisement

தம்பதி கொலையில் இருவர் கைது

மதுரையை சேர்ந்த செல்வராஜ் - வசந்தாமணி தம்பதி மகனின் திருமண பத்திரிகை கொடுப்பதற்காக, திருப்பூர், வெள்ளக்கோவிலில் வசிக்கும் செல்வராஜின் அக்கா கண்ணம்மாளி்ன் வீட்டுக்கு சென்றவர்கள் வீடு திரும்பவில்லை. போலீசார் நடத்திய விசாரணையில், தம்பதி கொலை செய்யப்பட்டு கண்ணம்மாள் வீட்டருக்கே புதைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. பிரேத பரிசோதனையில், வசந்தாமணி கழுத்தறுக்கப்பட்டும், செல்வராஜ் தலையில் கிரைண்டர் கல்லை போட்டும் கொலை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது. பூர்விக சொத்து விற்பனையில் பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட விரோதத்தால் தம்பதியை கொலை செய்ததாக, கண்ணம்மாள், அவரது மருகமன் நாகேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். கண்ணம்மாளின் மகள் பூங்கொடி, நாகேந்திரனின் நண்பர் இளங்கோ ஆகியோரிடமும் விசாரணை நடக்கிறது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement