Advertisement

'சன்டே' பணிக்கு வந்தவர்களுக்கு பாராட்டு!

விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமைகளிலும், கோவையில் பணியாற்றி வரும் பல்வேறு துறைகளை சேர்ந்த பணியாளர்களுக்கு இனிப்பு வழங்கியும், பாராட்டு கடிதம் கொடுத்தும் அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் அமைப்பின் மாணவர் பிரிவினர் கவுரவப்படுத்தினர். தீயணைப்பு துறையினர், 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள், காவல்துறையினர், அரசு மருத்துவமனை ஊழியர்கள், தூய்மைப் பணியாளர்கள் என பலருக்கும் மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஞாயிற்றுகிழமைகளில் தங்கள் குடும்பத்துடன் இருப்பதையே அனைவரும் அதிகம் விரும்புவர். அந்த விடுமுறை நாளிலும், வழக்கம்போல பணிக்கு வருபவர்களை பாராட்டுவதன் மூலம், அவர்களுக்கு உற்சாகத்தை கொடுக்க முடிவதோடு, மன அழுத்தங்களையும் குறைக்க முடியும் என்பதால், மாணவர்கள் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement