Advertisement

சூளைகளால் காற்று மாசு; கருவிகள் மூலம் கணக்கீடு

கோவை, தடாகம் பகுதியில் செயல்படும் செங்கல் சூளைகளில் இருந்து வெளியேறும் புகையால், காற்று அதிகளவு மாசு ஏற்பட்டு, அப்பகுதி மக்களுக்கு சுவாசக்கோளாறு, ஆஸ்துமா மற்றும் நுரையீறல் சம்பந்தமான நோய்கள் ஏற்படுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்துவருகின்றனர். செங்கல் தயாரிக்க ரசாயனம் மற்றும் தரமற்ற நிலக்கரிகளை பயன்படுத்துவதால், அவற்றை எரியூட்டும்போது, நச்சுப்புகை வெளியேறுவதால் இந்த பாதிப்புகள் ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், செங்கல் தொழிற்சாலைகளால் காற்றில் ஏற்படும் மாசுபாட்டை அளக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் சென்னையில் இருந்து வரவழைக்கப்பட்ட கருவிகள் மூலம் தடாகம் பகுதியில் மாசு கணக்கிடும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தடாகம், சின்னத்தடாகம், வீரபாண்டி போன்ற பகுதிகளில் இந்த சோதனை நடத்தப்படுகிறது. 24 நான்கு மணிநேரம் தொடர்ந்து காற்றின் மாசு கணக்கிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் மாசு அளவிடும் கருவிகளை சில மாதங்களுக்கு இங்குவைக்கப்படவேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement