Advertisement

பூட்டிய வீட்டில் 40 பவுன் கொள்ளை

ஈரோடு கோபிசெட்டிபாளையம், ஜே.எஸ்.,நகரில் வசிக்கும் முருகேசன் வீட்டை பூட்டிவிட்டு, குடும்பத்துடன் ஈரோட்டில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். திரும்பிவந்தபோது, வீட்டின் பின்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததுடன், பீரோவில் இருந்த 40 பவுன் நகையும் கொள்ளை போயிருந்தது தெரியவந்தது. இது தொடர்பாக, கோபி போலீசார் விசாரிக்கின்றனர். இரு தினங்களுக்கு முன்புதான், மாங்கினாங்கோம்பையில் கருப்புசாமி என்பவரின் வீட்டில் 30 பவுன் நகை, 2 லட்சம் ரூபாய் கொள்ளைபோன நிலையில், அதன் தொடர்ச்சியாக, மற்றொரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement