Advertisement

ஆரே மரங்களை வெட்ட தடை

மும்பையின், ஆரே வனத்தில் மெட்ரோ ரயில்நிலைய வாகன நிறுத்தம் அமைப்பதற்காக அங்கிருந்த 2700 மரங்களை வெட்ட மாநகராட்சி அனுமதி அளித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ், மஹாராஷ்டிரா நவநிர்மான் சேனா, ஆம் ஆத்மி, சமாஜ்வாடி கட்சி உட்பட பல்வேறு தன்னார்வலர்கள் போராட்டத்தில் இறங்கினர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைதாயினர். ஆரே மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. அதை தொடர்ந்து மஹாராஷ்டிரா சட்ட மாணவர்கள் ஆரே விவகரத்தை முன் வந்து விசாரிக்க கோரிக்கை வைத்து தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு கடிதம் எழுதினர். மாணவர்களின் கடிதத்தை ஏற்ற சுப்ரீம்கோர்ட், ஆரே பகுதியில் மரங்களை வெட்டக்கூடாது என மும்பை மாநகராட்சிக்கும், மெட்ரோ நிர்வாகத்துக்கும் உத்தரவிட்டது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement