Advertisement

மோடிக்கு கமல் வேண்டுகோள்

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு மகாபலிபுரத்தில் அக்டோபர் 11, 12 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதற்காக, பிரதமரை வரவேற்று, சென்னை விமான நிலையம் முதல் மகாபலிபுரம் வரை பேனர் வைக்க அனுமதிக்குமாறு தமிழக அரசு சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இது தொடர்பாக மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன், பிரதமர் அலுவலகத்தை குறிப்பிட்டு டுவிட்டரில் ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில், தமிழ்நாடும், தமிழ் மக்களும் சுபஸ்ரீ உயிரிழந்த வருத்தத்தில் இருக்கும் போது, பிரதமரின் வருகைக்காக பேனர் வைக்க தமிழக அரசு அனுமதி கேட்கிறது. பிரதமரான நீங்கள் ஒருமுன்னோடியாக திகழ, முதலில் பேனர் கலாசாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க பிரதமர் நடவடிக்கை எடுத்தால் தமிழர்கள் மீதான உங்கள் அக்கறை பிரதிபலிக்கும். என்று குறிப்பிட்டுள்ளார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement