LOGIN
dinamalar telegram
Advertisement

பாதாள சாக்கடை சுத்தம் செய்ய மாநகராட்சிக்கு 2 ரோபோக்கள்

கோவை, இருகூரை அடுத்துள்ள இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்பரேஷன் வளாகத்தில் பாதாளச்சாக்கடை அடைப்பு நீக்குவதற்காக வடிவமைக்கப்பட்டுள்ள இரண்டு ரோபோக்கள் கோவை மாநகராட்சிக்கு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில், கலந்து கொண்டபின் பேசிய தேசிய துாய்மைப்பணியாளர் ஆணைய உறுப்பினர் ஜெகதீஷ்ஹிர்மானி, கழிவுநீர் தொட்டி மற்றும் பாதாள சாக்கடையில் ஏற்பட்டுள்ள அடைப்பை நீக்குவதற்காக, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவனம் சமுதாய பொறுப்புதிட்டத்தில் இரண்டு ரோபோக்களை வடிவமைத்துள்ளதாக கூறினார். பெட்ரோலில் இயங்கும் இந்த ரோபோவில் நான்கு கேமராக்கள், ஜெனரேட்டர், டிஜிட்டல் மீட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. பத்து அடி ஆழம் வரை சுத்தம் செய்யக்கூடியது. தினமும் 10 முறை பாதாள சாக்கடை கழிவுகளை அகற்றும்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement