LOGIN
dinamalar telegram
Advertisement

100 கிலோ நகைகள் கொள்ளை

திருச்சி, சத்திரம் பேருந்து நிலையம் அருகே செயல்பட்டு வரும் பிரபல நகைக்கடையை வழக்கம்போல் காலையில் திறந்து ஊழியர்கள் உள்ளே சென்றபோது, கடையின் கீழ்தளத்தில், விற்பனைக்காக காட்சிப்படுத்தப்பட்டிருந்த நகைகள் அனைத்தும் மாயமானதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். கடை மேலாளர் கொடுத்த புகாரின் அடிப்படையில், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ், துணை கமிஷனர் மயில்வாகனன் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட போலீசார் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். கடையின் வலதுபக்கவாட்டு சுவரில் துளையிட்டு புகுந்த கொள்ளையர்கள், கீழ் தளத்தில் இருந்த தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றது விசாரணையில் தெரியவந்தது. 100 கிலோ நகைகள் பறிபோனதாகவும் அவற்றின் மதிப்பு சுமார் 36 கோடி ரூபாய் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

kids contest
Advertisement