Advertisement

பேருந்து விபத்தில் 2 பேர் உயிரிழப்பு; டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது வழக்கு

கோவையிலிருந்து மதுரைக்கு சென்று கொண்டிருந்த பேருந்து, பொள்ளாச்சி - உடுமலை தேசிய நெடுஞ்சாலையில், ஊஞ்சவேலம்பட்டி அருகே சாலையோர தடுப்புச்சுவர் மீது மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. உடுமலையை சேர்ந்த ராஜேஸ்கண்ணா மற்றும், நடத்துனர் சொக்கலிங்கம் ஆகியோர் உயிரிழந்தனர். 5 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எதிரே வந்த வாகனத்திற்கு ஒதுங்கி வழிவிட முயன்றபோது, இந்த விபத்து நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. விபத்து நடந்த இடத்தில், புதிதாக சாலைப்போடும் பணி நடைபெற்று வருகிறது. சென்டர் மீடியன் உள்ளிட்ட பணிகள் நிறைவடையாத நிலையில், இரவில் வரும் வாகனங்களுக்கு தெரியும் வகையில், எச்சரிக்கை பலகைககள், பிரதிபலிப்பான் வைக்காமல் அஜாக்கிரதையாக இருந்த சாலைப்பணி ஒப்பந்ததாரரான SPL இன்ப்ராஸ்டெச்சர் நிறுவன உரிமையாளர் மோகன், மேற்பார்வையாளர் தமிழ்மணி மற்றும் அரசு பேருந்தை கவனக்குறைவாக இயக்கிய டிரைவர் லட்சுமணன் உள்ளிட்ட 4 பேர் மீது கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement