Advertisement

மண்டல கால்பந்து மகாலிங்கம் வெற்றி

திருமலையாம்பாளையம், நேரு ஐ.இ.டெக்.,கல்லுாரி சார்பில், அண்ணா பல்கலைக்கழக 10வது மண்டல கல்லுாரி மாணவர்களுக்கான கால்பந்து போட்டி கல்லுாரி வளாகத்தில் நடந்தது. 25 அணிகள் பங்கேற்றன. சனியன்று நடந்த போட்டியில், பொள்ளாச்சி மகாலிங்கம் கல்லுாரி 5-0 என்ற கோல் கணக்கில் ஈஷா கல்லுாரியையும், டேனிஸ் அகமது கல்லுாரி , 4-0 என்ற கோல் கணக்கில் சி.ஐ.இ.டி., கல்லுாரி யையும் வென்றன. தனலட்சுமி கல்லுாரி, 4-0 என்ற கோல் கணக்கில், சி.எம்.எஸ்., கல்லுாரியை வென்றது. வெற்றி பெற்ற அணிகள் அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றன.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement