Advertisement

தேசிய அளவிலான கார் பந்தயம்; கேரள வீரர் அசத்தல்

கோவை, போத்தனுாரை அடுத்த செட்டிபாளையம், கரி மோட்டார் ஸ்பீடுவேயில், ஜே.கே.டயர். - எப்.எம்.எஸ்.சி.ஐ.,யின் 22 வது தேசிய கார் சாம்பியனுக்கான மூன்றாம் சுற்று போட்டிகள் துவங்கியது. சுசூகி ஜிக்சர் கோப்பை பைக் போட்டியில் புனேவின் தனே கெய்க்வாட், பெங்களூருவின் ஜெகதீஷ் மற்றும் கோவையின் சித்தார்த் சஜன் ஆகியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். முதல் இரு சுற்றுகளின் முடிவில் முதலிடத்தில் இருந்த சையது முசமில் அலி, பைக்கில் ஏற்பட்ட பழுதால் போட்டியிலிருந்து வெளியேறினார். எல்.ஜி.பி.பார்முலா 4 பிரிவில், முதல் இரண்டு சுற்றுகளின் முடிவில் முதல் இரு இடங்களிலுள்ள நடப்பு சாம்பியன் ராகுல் ரங்கசாமி, விஷ்ணுபிரசாத் ஆகியோருடன், இம்முறை கேரளாவின் தில்ஜித், சென்னையின் சந்தீப்குமார், அஷ்வின் தத்தா ஆகியோர் துவக்கம் முதலே கடும் போட்டியை கொடுத்தனர். இதில் பல வீரர்கள் கார் பழுது மற்றும் மோதலால் போட்டியிலிருந்து விலகினர். இறுதியில், தில்ஜித், சந்தீப்குமார் மற்றும் அஷ்வின் தத்தா ஆதியோர் முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். நடப்பு சாம்பியன் ராகுல்ரங்கசாமி ஏமாற்றத்துடன் போட்டியை முடித்தார்.
Share
தினமலர் செய்தியை உடனுக்குடன் பெற Telegram app-ல் எங்களோடு இணைந்திருங்கள்.

Comments Comments


Avatar
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

தொடர்புடையவை

Autoplay


வீடியோ பில்டர்

Advertisement