காரைக்கால் நேரு வேளாண் கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய மாணவிகள் கடந்த மூன்று மாதகளாக புதுச்சேரி கிராமங்களில் தங்கி
ஊரக வேளாண் ஆய்வுப் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
இதன் ஒருப் பகுதியாக, கூனிச்சம்பட்டு
சமுதாயக் கூடத்தில் வேளாண் கண்காட்சி மற்றும் செயல்விளக்கம் நிகழ்ச்சியை நடத்தினர்.
கண்காட்சியில் இயற்கை பூச்சி விரட்டிகளான பிரம்மாஸ்திரம், நீமாஸ்திரம், இயற்கை பயிர் ஊக்கிகள், எலி கட்டுப்படுத்துதல், மண்ணில்லா விவசாயமான நீரியல் வளர்ப்பு, இறால் வளர்ப்பு, பாரம்பரிய நெல் ரகங்கள் உள்ளிட்டவை குறித்து விவசாயிகளுக்கு செயல்முறை விளக்கம் அளித்தனர்..